வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் ‘தீவிர’ புயலாக மாறி, சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 260 கி.மீ தொலைவில் மையம் கொண்டு இருஙக நிலையில், தற்போது வலுவிழந்து ‘புயலாக’ வலுவிழந்துள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது.
கடந்த 7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் அது புயலாக வலுப்பெற்ற நிலையில், தற்போது அது சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே 200 கி.மீ. தொலைவிலும் ‘மாண்டஸ்’ புயல் நிலைக்கொண்டுள்ளது.
இன்று அதிகாலை அது தீவிர புயலாக மாறி மேற்கு – வடமேற்கு திசையில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தீவிர புயலாக மாறிய ‘மாண்டஸ்’ புயல் தற்போது வலுவிழந்து புயலாக மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.