Shocking Video: ரயில் நிலையத்தில் TTE மீது விழுந்த உயர் மின்னழுத்த கம்பி!

இணையதளத்தில் தற்போது அதிர்ச்சி தரும் வீடியோ பரவி வருகிறது. மேற்கு வங்காளத்தில் உள்ள காரக்பூர் ரயில் நிலையத்தில், நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் மீது  உயர் மின் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில்  மின்சாரம் தாக்கி அவர் தலைக்குப்புற விழுந்த காட்சி மனதை பதற வைக்கும். ரயில் டிக்கெட் பரிசோதனை (TTE) அதிகாரி, ஒரு நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது, உயர் மின்னழுத்த கம்பி ஒன்று அவரது தலையில் அறுந்தது.   அதிர்ச்சியூட்டும் காட்சிகளில் அவர் தண்டவாளத்தில் தலைகுப்புற விழுவதைக் காணலாம்.

சுஜன் சிங் சர்தார் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் மீட்டனர். கேமராவில் பதிவான இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அனந்த் ரூபனகுடி எனற ரயில்வே அதிகாரி ட்விட்டரில் இது குறித்து பதிவிடுகையில், “இது ஒரு வினோதமான விபத்து – ஒரு நீண்ட தளர்வான கேபிள், எப்படியோ ஒரு பறவையால் OHE வயருடன் தொடர்பு வந்துள்ளது, மறுமுனை கீழே விழுந்ததில், TTE இன் தலையைத் தொட்டது. அவர் தீக்காயங்களுக்கு ஆளானார், ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது சிகிச்சையில் உள்ளார்.

காரக்பூர் டிஆர்எம் முகமது சுஜாத் ஹஷ்மி, இந்தியா டுடேயிடம் பேசுகையில், “எங்களுக்கு சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் சில அலங்கார கம்பிகள் TTE மீது  விழுந்திருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, அதிகாரி நலமாக இருக்கிறார், நாங்கள் அவரிடம் பேசினோம் எனக் கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.