தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருகின்றார். இடையில் சில காலம் தோல்வி முகத்தில் இருந்த சூர்யாவிற்கு எதிர்பார்த்த வெற்றியை தேடி தந்தது சூரரைப்போற்று திரைப்படம்.
OTT யில் வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. அதன் பிறகு வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வெற்றிகண்டது. இதையடுத்து கமலின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் சூர்யா.
Keerthy suresh: திரைத்துறையில் பாலியல் தொல்லைகள்..சினிமாவை விட்டு விலகிவிடுவேன்..அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!
இந்த ரோலை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் இந்தாண்டு ஆரம்பத்தில் சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணி மீண்டும் இணைந்தது. நந்தா, பிதாமகன் படத்தின் மூலம் சூர்யாவிற்கு அடையாளத்தை கொடுத்த பாலா வணங்கான் படத்தின் மூலம் மீண்டும் சூர்யாவுடன் இணைந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது. ஆனால் திடீரென படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சூர்யா சென்னை திரும்பினார். இது கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூர்யா மற்றும் பாலாவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகத்தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட்டது என தகவல் வந்தது. ஆனால் இந்த தகவலை சூர்யாவின் தரப்பு மறுத்தது. இந்நிலையில் இப்படம் என்ன ஆனது என்றே தெரியாமல் இருக்க சில நாட்களுக்கு முன்பு பாலா ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இக்கதை சூர்யாவிற்கு பொருத்தமாக இருக்காது என்பதால் சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் பாலா. பதிலுக்கு சூர்யாவும் தங்களின் 2d நிறுவனம் வணங்கான் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் வணங்கான் படத்தை தயாரித்த சூர்யாவிற்கு இப்படத்தினால் கிட்டத்தட்ட 10 கோடி வரை நஷ்டமாம்.
நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் ஒரு நாள் தவறாமல் அனைவர்க்கும் சம்பளத்தை கொடுத்துள்ளார் சூர்யா. மேலும் செட் வேலைகள் உட்பட அனைத்தையும் சேர்த்து இப்படத்திற்கு இதுவரை 10 கோடி செலவு செய்துள்ளாராம். தற்போது படம் பாதியில் நின்று போனதால் சூர்யாவிற்கு 10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.