சிட்டகாங்: இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஷிகார் தவான் 8 பந்தில் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
தொடர்ந்து இஷான் கிஷன் – கோஹ்லி ஜோடி இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. இவர்களை பிரிக்க வங்கதேச பவுலர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை. இஷன் கிஷன் 126 பந்துகளில் இரட்டை சதமடித்தார். 131 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கோஹ்லியும் 85 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடங்கும். மொத்தம், 91 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து கோஹ்லி அவுட்டானார்.
இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் சச்சின், சேவக், ரோகித் சர்மாவுக்கு பிறகு இரட்டை சதமடித்து இஷன் கிஷன் சாதனை படைத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement