இனி.. ஆணுறை இலவசம்; வெட்கத்துடன் வரவேற்கும் இளைஞர்கள்.. இளம்பெண்கள்!

பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் இருந்து வருகிறார். இவர் அந்நாட்டு இளைஞர்கள் சுகாதார நலனை கருத்தில் கொண்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அதன்படி பிரான்ஸ் நாட்டின் இளைஞர்களுக்கு விருப்பம் இல்லாமல் விபத்தாக கருத்தரிப்பு ஏற்படுவதை தவிர்க்க மருந்துக் கடைகளில் ஆணுறையை இலவசமாக வழங்க போவதாக அறிவித்து உள்ளார்.

இதன் மூலம் கருத்தடையில் ஒரு சிறிய புரட்சி ஏற்படப் போவதாக தனது அரசின் முடிவை மெக்ரான் புகழ்ந்துள்ளார். நாட்டின் 25 வயதுக்கு குறைவான பெண்களின் கருத்தரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்படுவதாகவும் பிரான்ஸ் நாட்டின் அதிபரான இமானுவேல் மேக்ரான் கூறி இருக்கிறார்.

பொங்கல் பரிசு இது தான்; வெளியானது சூப்பர் அறிவிப்பு!

இதன் அடிப்படையில் இனி மேல் 18 முதல் 25 வயது கொண்ட இளைஞர்களுக்கு அனைத்து மருந்து கடைகளிலும் ஆணுறை இலவசமாக வழங்கப்படும் என பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறி உள்ளார்.

மேலும் பிரான்ஸ் நாட்டில் பாலியல் கல்வி மக்களிடையே ஒழுங்காக சென்று சேரவில்லை என கூறியுள்ள அதிபர் மேக்ரான், புத்தகத்தில் இருப்பது போல் இல்லாமல் எதார்த்தத்தில் நிலைமை வேறாக உள்ளதாகவும், இதனால் மேலும் முறையாக பயிற்சி வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் கடந்த 2 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்து இருக்கும் நிலையில் அந்த நாட்டில் ஏற்கனவே 18 மற்றும் அதற்கு குறைவான வயது உடைய பெண்களுக்கு கருத்தடை சாதனம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

மின் ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு; கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தல்!

ஆனாலும் பாலியல் நோய்கள் அதிகரித்து காணப்பட்டதால், கடந்த 2018ம் ஆண்டில் பிரான்ஸ் அரசு மருத்துவர்கள் பிரிஸ்கிரிப்ஷன் கொடுத்தால் ஆணுறை சலுகை விலையில் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இதை தற்போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 18 முதல் 25 வயது உடையவர்களுக்கு பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமலேயே ஆணுறை வழங்கப்படும் என்றும், எவ்வித தயக்கமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் என்கிற புதிய நடைமுறை பிரான்ஸ் நாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திட்டம் இலம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் நாட்டு மக்கள் கூறியதாவது: பிரான்சில் பாலியல் நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே சலுகை விலையில் ஆணுறை வழங்கப்பட்டது. ஆனாலும் இந்த திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

அண்ணாமலைக்கு புதிய பவர்.. நிர்வாகிகள் கலக்கம்; பாகம்-1

பிரான்ஸ் நாட்டை பொறுத்தவரை பாலியல் நோய்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய ஒன்று. இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவே இலவச ஆணுறை வழங்க முடிவெடுத்து இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இது மிகுந்த பலன் அளிக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு பொதுமக்கள் சிலர் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.