மாண்டஸ் புயல் காரணாமாக இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புயல் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருப்பதால் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், இன்று நடைபெற இருந்த டிப்ளமோ தேர்வுகள் ஓத்த்திவைக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 17ம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.