இமாச்சலின் அடுத்த முதல்வர் சுக்விந்தர் சிங்; துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி!

இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகுவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோதிரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாளை காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கவிருக்கிறது.
68 சட்டமன்றத் தொகுதிகளில் 40 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ், பாஜகவிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஹிமாச்சலில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 35 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், அங்கு பாஜக 25 இடங்களைப் பெற்று அதிகாரத்தை இழந்தது.
image
காங்கிரஸின் இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் தலைவர் சுக்விந்தர் சிங் சுகு, அக்கட்சியின் சட்டமன்றக்குழு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இமாச்சல் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், முகேஷ் அக்னிஹோத்ரி சுக்குவின் துணைவராக இருப்பார் என்றும், இமாச்சலில் காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசு பதவியேற்பு விழா நாளை நடைபெறவிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
இதுகுறித்து பேசியிருக்கும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், “காங்கிரஸ் தலைவர் சுக்விந்தர் சிங் சுகு இமாச்சல பிரதேச முதல்வராகவும், முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழா நாளை நடைபெறும்” என்று தெரிவித்தார்.’
தகவல்களின் படி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணிக்கு சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் முதலமைச்சரும் அவரது துணை அமைச்சரும் பதவியேற்பார்கள் என்றும், பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிகிறது. முடிவு அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, காங்கிரஸ் மேலிடத்தின் முடிவை ஏற்றுக்கொண்டதாக பிரதீபா சிங் கூறினார்.
மறுபுறம், காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, “நாங்கள் மிகச் சிறந்த ஆட்சியை நடத்துவோம். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் நாளை பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள்” என்று கூறியுள்ளார்.
image
இதற்கு முன்னராக சுக்விந்தர் சிங் சுகு மாநிலத்தில் முக்கியமான அலுவலகங்களில் பதவி வகித்தார். அவர் காங்கிரஸ் பிரச்சாரக் குழுவின் தலைவராகவும் உள்ளார் மற்றும் இமாச்சலில் 5ஆவது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.