பெங்களூரு: ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைபர் சோனிக் தொழில்நுட்பத்தை விமானம், ஏவுகணை மற்றும் விண்கலங்களில் பயன்படுத்த முடியும். இந்த ஹைபர்சோனிக் தொழில்நுட்பம் மிகவும் நவீன தொழில்நுட்பம். இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஹைபர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
தற்போது ரஷ்யாவுடன் இணைந்து ஹைபர் சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் அணு ஆயுதங்களை ஏவ முடியும். இந்த தொழில்நுட்பத்தை இந்தியா கடந்த 2019 மற்றும் 2020 செப்டம்பரிலும் பரிசோதித்துள்ளது. இந்த பரிசோதனையில் ஸ்கிராம்ஜெட் இன்ஜினுடன் கூடிய ராக்கெட் பயன்படுத்தப்பட்டது.
இது மணிக்கு 7,500 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. இந்த ஹைபர்சோனிக் ராக்கெட் பரிசோதனையை இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டது. ஒலியைவிட 13 மடங்கு வேகத்தில் செல்லும் ஏவுகணைகளை பரிசோதிக்க கூடிய, 12 ஹைபர்சோனிக் சுரங்கங்களை இந்தியா உருவாக்கியுள்ளது என அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.