கத்தார் உலகக் கோப்பையில் அடுத்த அதிர்ச்சி: அரையிறுதி வாய்ப்பை இழந்த போர்ச்சுகல்


கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில் அணி வெளியேறி அதிர்ச்சி அளித்த நிலையில், தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி மொராக்கோவிடம் வெற்றியை பறிகொடுத்துள்ளது.

முதல் ஆப்பிரிக்க நாடு

இதனையடுத்து கால்பந்து உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது.
பரபரப்பான ஆட்டத்தில் மொராக்கோவின் Youssef En-Nesyri பதிவு செய்த கோல் அவர்களை அரையிறுதிக்கு கொண்டுசென்றுள்ளது.

கத்தார் உலகக் கோப்பையில் அடுத்த அதிர்ச்சி: அரையிறுதி வாய்ப்பை இழந்த போர்ச்சுகல் | Portugal Crash Out Of World Cup

@getty

இரண்டாவது பாதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை சாமர்த்தியமாக எதிர்கொண்ட மொராக்கோ, கோல் எதுவும் பதிவு செய்து விடாமல் தடுப்பாட்டத்தில் கவனம் வைத்தது.

சுவிட்சர்லாந்து அணிக்கு 6 கோல் பரிசளித்த போர்ச்சுகல் அணியில், இந்த முறையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறக்கப்படாமல், 51வது நிமிடத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

கத்தார் உலகக் கோப்பையில் அடுத்த அதிர்ச்சி: அரையிறுதி வாய்ப்பை இழந்த போர்ச்சுகல் | Portugal Crash Out Of World Cup

@reuters

கலங்கிய கண்களுடன் ரொனால்டோ

ஆனால் அதன் பின்னர் ஆட்டத்தில் தம்மை முன்னிலைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானது.
இறுதியில் களத்தில் இருந்து கலங்கிய கண்களுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறியுள்ளார்.

கத்தார் உலகக் கோப்பையில் அடுத்த அதிர்ச்சி: அரையிறுதி வாய்ப்பை இழந்த போர்ச்சுகல் | Portugal Crash Out Of World Cup

@getty

கத்தார் உலகக் கோப்பை தொடர்பில் ஸ்பெயின் அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மொராக்கோ அணி, தற்போது போர்ச்சுகல் அணிக்கு மரண அடி அளித்துள்ளது.

இனி, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் அரையிறுதியில் மொராக்கோ மோதவிருக்கிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.