வட தமிழக மக்களை அச்சுறுத்தி வந்த மான்டஸ் புயல் சென்னையின் மாமல்லபுரம் அருகே இரவு 2:30 மணியளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரையை கடந்த மாண்டஸ்
சென்னை மற்றும் வங்க கடலை ஒட்டியுள்ள வட கிழக்கு மாவட்டங்களை அச்சுறுத்திய மாண்டஸ் புயல், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்து, பின்னர் வலுப்பெற்று ஆழ்ந்த தாழ்வு மண்டல புயலாக மாறியது.
இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே அதாவது கிட்டத்தட்ட சென்னையின் மாமல்லபுரத்தில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என நேற்று எதிர்பார்க்கப்பட்டது.
Looks like it came much closer to #Chennai than predicted !#MandousCyclone pic.twitter.com/5GR7GCQwEq
— Dr. T R B Rajaa (@TRBRajaa) December 9, 2022
இந்நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மைய பகுதி இரவு 2:30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயலின் மையப்பகுதி கரையை கடந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு புயலின் பின்பகுதி கரையை கடந்தாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், மாண்டஸ் புயல் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததுள்ளது, மேலும் இன்று பிற்பகலில் மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க உள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னையில் #MandousCyclone காரணமாக விழுந்த மரங்களை அகற்கும் பணி இன்று மாலைக்குள் நிறைவடையும்.
– மாநகராட்சி ஆணையர் திரு. ககன்தீப்சிங் பேடி.@chennaicorp @airnewsalerts @pibchennai pic.twitter.com/WqqWDfi5CQ
— AIR News Chennai (@airnews_Chennai) December 10, 2022
புயல் சேதம்
வட தமிழக மாவட்டங்களை தாக்கிய மாண்டஸ் புயலால், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் மரங்கள் சரிந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தும், புயல் காற்று மோதியும் வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை புயல் காற்றினால் பலத்த சேதமடைந்துள்ளது.
#TamilNadu | Portion of the ‘permanent ramp’, that was installed at Marina Beach in Chennai to help differently-abled people, gets damaged in the strong winds and rough sea due to #CycloneMandous
The ramp was inaugurated on November 27. #MandousCyclone (ANI) pic.twitter.com/Ygrtpjd1u3
— Mirror Now (@MirrorNow) December 10, 2022
இது குறித்து சென்னை மேயர் பிரியா வழங்கிய தகவலில், சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.