ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள துணிவு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை வரவேற்கும் விதமாக நெல்லை சந்திப்பு ராம் சினிமாஸ் திரையரங்கில் அஜித் ரசிகர்கள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஜெண்டை மேளம் வானவேடிக்கை என கலை கட்டிய சிங்கிள் வெளியீட்டு விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெல்லை சந்திப்பு ராம் சினிமாஸ் திரையரங்கில் குவிந்தனர்.
Mass celebration happening for #ChillaChilla song release in your #RamCinemas #ThunivuInRamCinemas pic.twitter.com/o7ECBPPTe9
— Ram Muthuram Cinemas (@RamCinemas) December 9, 2022
நடிகர் அஜித்திற்கு வைக்கப்பட்டிருந்த ஆளுயர கட்டவுட்க்கு பிரம்மாண்ட மாலை அணிவித்தும் பாலாபிஷேகம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கட்டுக்கடங்காமல் குவிந்த ரசிகர்கள் பட்டாளத்தை கட்டுப்படுத்த முடியாமல் திரையரங்கு ஊழியர்கள் திணறினர். பகுதி பகுதியாக
ரசிகர்களை பிரித்து திரையரங்குகள் அனுமதித்த நிலையில் துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஒளிபரப்பப்பட்டது. செல்போன் டார்ச் லைட் அடித்து காமித்து ரசிகர்கள் பாடலுக்கு குத்தாட்டமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அஜித் நடித்து வெளியான துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியான நிலையில் திரையரங்கு வளாகமே விழாக்கோலம் கொண்டது.
Exclusive 360° Video of #Thunivu #ChillaChilla song Celebration in your #RamCinemas #ThunivuInRamCinemas@BoneyKapoor @ZeeStudios_ @Udhaystalin @zeemusicsouth pic.twitter.com/CeOT8nvZ7C
— Ram Muthuram Cinemas (@RamCinemas) December 9, 2022
துணிவு படத்தின் புரமோஷன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. புத்தாண்டு சிறப்பாக படத்தின் டீசர் அல்லது ட்ரைலரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் ரசிகர்களை திருப்த்திபடுத்தாத நிலையில் துணிவு படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசு படமும் வெளியாக உள்ளது.