தெலுங்கானாவில் பரபரப்பு!!வீடு புகுந்து இளம் பெண் மருத்துவர் கடத்தல்..!!

தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் துர்கயாம்ஜல் நகராட்சி பகுதியில் அடிபட்லா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வைஷாலி (24). இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவரது வீட்டுக்கு திடீரென 100 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது.

அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் சூறையாடி விட்டு, படுக்கையறையில் இருந்த பெண் மருத்துவரை காரில் கடத்தி சென்று விட்டது. அவர்களை தடுக்க முயன்ற பெற்றோரையும் அந்த கும்பல் கம்புகள், கட்டைகளை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளது. இதில், அவரது தந்தை படுகாயமடைந்து உள்ளார். சாலையில் இருந்த கார் ஒன்றும் தாக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ரச்சகொண்டா கூடுதல் காவல் ஆணையாளர் சுதீர் பாபு தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காதல் விவகாரத்தில் வைஷாலியை கடத்தியிருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொழிலதிபர் ஒருவர் மீது பெண்ணின் பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.