மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக பல முன்னணி நடிகைகள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சுவாசிகா அண்மையில் அடித்துள்ள பேட்டியில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், மலையாள திரையுலகம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக தான் இருக்கிறது, இங்கு பெண்களை யாரும் படுக்கைக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துவது கிடையாது.
இரவு யாராவது அறை கதவை தட்டினால் நீங்கள் திறக்கக் கூடாது. கதவு திறக்காமல் உங்கள் அறை உள்ளே யாரும் வர முடியாது. அதையும் மீறி ஏதேனும் மோசமான அனுபவம் நேர்ந்தால் காவல் நிலையத்துக்கோ அல்லது மகளிர் ஆணையத்திலோ புகார் செய்யலாம்.
சினிமா பெண்கள் நல அமைப்பில் புகார் செய்ய தேவை இல்லை. அந்த அமைப்பின் மூலம் நீதி கிடைக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. அதற்கு நேரம் எடுக்கும். நான் விரும்பத்தகாத சம்பவத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், உடனடியாக படப்பிடிப்பை விட்டு வெளியேறிவிடுவேன்.
பெண்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது தைரியம். தேவைப்படும் இடத்தில் ‘இல்லை’ என்று சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மிடூ குற்றச்சாட்டை முன்வைப்பது நியாயமற்றது.
பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் படம் வேண்டாம் என்று சொல்லுங்கள் என கூறியுள்ளார். இவரது பேட்டி மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in