
மாண்டஸ் புயல் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 192 வீடுகள் சேதமைடந்து, 300 மரங்கள் சாய்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
கரையைக் கடந்துள்ள மாண்டஸ் புயலானது, கடலோர மாவட்டங்களில் கனமழையை கொடுத்துவிட்டு இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

இது மேலும் மேற்கு – தென்மேற்காக நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கும் என்றும், அடுத்த 6 மணி நேரத்துக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்த போது சென்னையில் 300 மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் தாக்கி பட்டினம்பாக்கம் அருகே 2 பேர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். சைதாப்பேட்டையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் லட்சுமி என்ற பெண் உயிரிழந்தார்.

சென்னையில் 25 ஆயிரம் ஊழியர்கள் களத்தில் உள்ளனர். 900 மேட்டார்களில் 300 மேட்டார்கள் மட்டுமே இயங்கி கொண்டுள்ளது. சேதங்கள் கணக்கீடு செய்யப்பட்டு, விரைவில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ அரசு தெரிவித்துள்ளது.
newstm.in