மாண்டஸ் புயல்: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.3.45 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.3.45 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

மாண்டஸ் புயல் நேற்று (டிச.9) இரவு 11.30 மணியில் இருந்து நள்ளிரவுக்குப் பின் 1.30 மணிக்குள் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.3.45 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. 41 ரயில் நிலையங்களில் 4 சிறப்புக் குழுக்கள் இந்த சேத மதிப்புகளை ஆய்வு செய்துள்ளனர்.

கோயம்பேடு, சிஎம்பிடி பேருந்து நிலையம், ஈக்காட்டுத்தாங்கல், சின்னமலை, கிண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளன. அண்ணா நகர், அரும்பாக்கம், ஆயிரம் விளக்கு மெட்ரா ரயில் நிலையங்களில் வழிகாட்டி பலகைகைள் சேதம் அடைந்துள்ளன.

கோயம்பேடு பணிமனை மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்கள் வானக நிறுத்தும் இடத்தில் உள்ள குழாய்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த சேதங்களை உடனடியாக சீரமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.