VJ Archana: விஜே அர்ச்சனாவின் வாழ்வை மாற்றிய சூப்பர் ஸ்டார்: அவரே சொன்ன தகவல்.!

விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் சின்னத்திரையில் பிரபலமான விஜேவாக திகழ்பவர் அர்ச்சனா. இவர் ‘டாக்டர்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். டிவி, யூடிப் சேனல் என்று கலக்கி வரும் அர்ச்சனா தற்போது ஆர்ஜேவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். ரேடியோ மிர்ச்சியில் ரசிகர்களை கவரும் தனது கலகலப்பான பேச்சில் பிசியாக இருந்த அர்ச்சனா சமயம் தமிழுக்காக பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அதில் தனது ஆர்ஜே கனவு குறித்து பேசிய அவர் ரேடியோ மிர்ச்சியில் பணியாற்ற வேண்டும் என்பது தனது கனவு என்று தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் பிரபலமான ‘அச்சும்மா’ என்ற பெயராலே தற்போது ரேடியோ மிர்ச்சியிலும் அழைக்கப்படுவதால் ரசிகர்களுடன் ஒரு கனெக்ட் இருப்பதாக தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பேசும் போது மேடம் நீங்களா? என்று ஆச்சரியத்துடன் பேசுவதை பற்றியும் கூறியுள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நிறைய ரசிகர்கள் தன்னுடன் பேசும் போது டாபிக் மொத்தத்தையும் கேட்டுவிட்டு உங்க குரலை கேட்கத்தான் கால் பண்ணேன் என சொல்லி போனை வைத்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜே, யூடிப் சேனல், தற்போது ஆர்ஜே என கலக்கி வரும் அர்ச்சனாவிற்கு நேரமெல்லாம் எப்படி பத்துக்கிறது என கேட்கப்பட்ட போது, எல்லாரையும் போல எட்டு மணிநேரம் நல்லாவே தூங்குறேன்.

மத்தபடி மீதி பதினாறு மணிநேரத்துல தான் இந்த வேலையெல்லாம். இன்னும் சொல்லப்போன வேற வேலை இருந்தாலும் சொல்லுங்க. நெறைய டைம் எனக்கு மிச்சம் இருக்கும் என்றும் சொல்லி அசத்தியுள்ளார். மேலும் ரஜினியின் தீவிர ரசிகையான அர்ச்சனா, ‘பாபா’ ரீ ரிலீஸ் குறித்து பேசும் போது, சூப்பர் ஸ்டாரை வேறு ஒரு பரிணாமத்தில் காட்டிய படம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு பிறகு தான் ஆன்மீகத்தில் தனது அதிக ஈடுபாடு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Varalaru Mukkiyam: எஸ்எம்எஸ் படம் அளவிற்கு இருந்ததா.?: ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’ விமர்சனம்.!

அத்துடன் உருவமில்லாத கடவுள் நம்மை சூழ்ந்து இருப்பதையும் உணர வைத்தது பாபா படம் என்றும் கண்டிப்பாக படத்தை திரையரங்கில் பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார். ரஜினி படங்களின் நெகட்டிவ் விமர்சனம் குறித்து பேசிய அர்ச்சனா, சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பெஞ்ச் மார்க். எந்த ஹீரோவை கேட்டாலும் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்கணும் தான் சொல்லுவாங்க. அப்படி ஒரு இடத்தை கிரியேட் பண்ணி இருக்கார் என கூறியுள்ளார்.

Thunivu, Chilla Chilla: போடு வெடிய.. தாறுமாறாய் வெளியான ‘சில்லா சில்லா’: ஏகே ஆட்டம் ஆரம்பம்.!

நெல்சனோட ‘ஜெயிலர்’ படத்தை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது மகள் சாரா தற்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருப்பதாகவும், தான் டவுன் ஆகும் போதெல்லாம் அவர்தான் தனக்கு சப்போர்ட்டாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் தற்போது ஆர்ஜே அவதாரம் எடுத்துள்ள விஜே அர்ச்சனா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.