தமிழக கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

தமிழகத்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான நடராஜன், பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார். ஒரு சில போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடிய அவர், ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் லேட்டஸ்டாக கொடுத்திருக்கும் பேட்டியில், தன்னுடைய வாழ்க்கை வரலாறு படமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்த நடராஜன், விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

சேலம் மாவட்டத்தில் இருந்து எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் நடராஜன். இவர் இந்திய கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு அந்த இலக்கை அடைந்தார். கிராமப்புறங்களில் இருந்து வரும் பல இளைஞர்களுக்கு இவர் முன்னுதாரணமாக இருக்கும் அவரின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். இவரது தாயார் தள்ளு வண்டியில் சிக்கன் தொழில் நடத்தி தான் இவரை படிக்க வைத்திருக்கிறார்.

தற்போது அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கண்டிப்பாக நடிப்பார் என்று பேசியிருக்கிறார் நடராஜன். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாரத்தான் என்பது அனைவருக்கும் முக்கியமானது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாறத்தானில் ஓட வேண்டும். உடல் வலிமையை மன வலிமையை இது அதிகரிக்கும். அனைத்து விளையாட்டிற்கும் ஓட்டம் என்பது முக்கியம் அதற்கு மரத்தான் எப்போதும் துணையாக இருக்கும் என்று பேசினார். கிராமப்புறங்களில் இருந்து நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும். என்னை போல் பல இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை என்றும் பேசினார்.

இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடுவேன் என்றும் மீண்டும் எனது திறமையை காண்பிப்பேன் என்றும் அவர் பேசினார். மீண்டும் இந்திய அணியில் பங்கேற்று விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும் என்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் கட்டாயம் எடுக்கப்படும் அதில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிப்பார். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு இந்த படம் உருவாகலாம். கண்டிப்பாக அவர்தான் நடிப்பார் அவரே இந்த படத்தை தயாரிக்கவும் இருக்கிறார் என்று நடராஜன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.