பாகிஸ்தான் எல்லை தாண்டி பயங்கரவாதம் – அமைச்சர் காட்டம்!

பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் அண்டை நாடுகளை கையாளலாம் என்று நம்புவதாக அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வழிபாடு நடத்தினார். முன்னதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த காசி தமிழ் சங்கமம் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியா தெற்காசிய பிராந்திய ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருவதாக கூறினார். உலகம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாகப் பார்க்கும் ஒரு சகாப்தம் இருந்தது, இன்று, யாரும் அதைச் செய்வதில்லை, இந்த பிராந்தியத்தில் முதன்மை சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றார்.

சார்க் அமைப்பு தற்போது செயல்படவில்லை. ஏனெனில் அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் அண்டை நாடுகளை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் கையாளலாம் என்று நம்புவதாக விமர்சித்துள்ளார். இந்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காத நாடுகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர்களின் பிரச்சினையில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்படி இந்தியா வலியுறுத்தவதாக ஜெய் கூறினார்.

நாம் ஒரு சுதந்திர சக்தியாக இருந்தால் தான், இந்தியாவை உலகம் மதிக்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்தியாவின் எழுச்சியை உலகமே இன்று உற்று நோக்கும் போது, அதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பும் வெற்றிகளும் ஒரு பகுதியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை கவனித்துக் கொள்வது நமது கடமை என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.