ஆன்லைன் ரம்மி விளம்பரம் குறித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் பேசியது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி சென்னை ராஜரத்தினம் அரங்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
அப்போது பேசிய அவர், தாம் விளம்பரத்தில் நடித்தபோது ஆன்லைன் ரம்மிக்கு தடைச் சட்டம் இல்லை என்றும், அதற்கு பிறகு தான் அவசர சட்டம் பிறப்பித்தார்கள் எனவும் கூறியுள்ளார்.
ஒருவேளை அவசரச் சட்டம் அதற்கு முன்பாக பிறப்பித்து இருந்தால் நடித்திருக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் வகுப்பது அரசின் வேலை.
அவசர சட்டம் கொண்டுவர வேண்டுமென அமைச்சர் ரகுபதியிடம் வலியுறுத்தி உள்ளதாக கூறிய சரத்குமார், ஆன்லைனில் ரம்மி மட்டுமல்ல ஆன்லைனில் பல விசயம் இருக்கிறது. நான் மட்டுமா நடிக்கிறேன். தோனி, ஷாருக்கான் கூட நடிக்கிறார்கள் என்று கூறினார்.
குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்களை ஆன்லைன் ரம்மி தற்கொலை என்கிறார்கள். உண்மையில் ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு. அதற்கு திறமை அவசியம் என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in