வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் இறப்பதைக் கருத்தில் கொண்டு இறைச்சிக் கடைகளின் சோதனைகளை அதிகரிக்க இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதுஇ பல பகுதிகளில் முறையான அனுமதியின்றி மாட்டிறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி என்பன விற்பனை செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.