விவகாரத்தில் பிடிவாதமாக இருப்பது, பாஜக மேலிடத் தலைவர்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவின் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை பிடிப்பதில்,
– எதிர்க்கட்சித் தலைவர்
இடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை,
நடத்தினார்.
அதில், 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து, அதே நாளில் அதே பொதுக்குழு மேடையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தார். இதுவரை நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணைகளில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே சாதகமான உத்தரவுகள் வந்து உள்ளன. இது ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், மனம் தளராத ஓ.பன்னீர்செல்வம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் பிடிப்பது, பாஜக மேலிடத் தலைவர்களை அதிருப்தி அடையச் செய்து உள்ளது. குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திரபாய் படேல் பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் படி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, பாஜக சார்பில் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
உண்மையான அதிமுக, ஒட்டு மொத்த நிர்வாகிகள் ஆதரவு தனது பக்கம் இருப்பதாக, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக முக்கியத்துவம் தருவதால், அவர் அதிருப்தி அடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, விழாவை புறக்கணித்து, சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம், பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
மேலும், கூட்டணி விவகாரத்தில் பாஜக முரண்பாடு பிடிக்கும் பட்சத்தில், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றி விடும் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தான் எடுத்த முடிவில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக திடமாக இருப்பது, பாஜக மேலிடத் தலைவர்களை அதிருப்தி அடையச் செய்து உள்ளது.