எல்லையில் நிலைமை சீராக உள்ளது… தவாங் மோதல் குறித்து சீனா வெளியிட்ட அறிக்கை!

தவாங் மோதல் குறித்து சீனா அறிக்கை: அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்து இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதோடு, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில், இந்தியா-சீனா  மோதல் மற்றும் எல்லை தகராறு குறித்த சீனாவின் முதல் அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும் இந்தியாவுடனான தனது எல்லையில் நிலைமை சீராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இராஜதந்திர மற்றும் இராணுவ வழிகள் மூலம் பேச்சுவார்த்தை தொடர்கிறது: சீனா

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இந்திய-சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து இந்தியா எழுப்பிய போது, ​​எல்லையில் நிலைமை சீராக இருப்பதாக சீனா கூறியது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ‘நாங்கள் புரிந்து கொண்ட வரையில், சீனா-இந்தியா எல்லையில் ஒட்டு மொத்தமாக நிலைமை சீராக உள்ளது. மேலும் அவர் கூறுகையில்,  ‘எல்லை விவகாரம் தொடர்பாக தூதரக மற்றும் ராணுவ வழிகள் மூலம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது’ என்றார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.