கத்தார் உலகக்கோப்பையில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட இங்கிலாந்து கேப்டன்! இந்திய தொழிலதிபர் கூறிய கருத்து


இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் ஹரி கேன் குறித்து ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார்.

கத்தார் உலகக்கோப்பையின் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் – இங்கிலாந்து அணிகள் மோதின.

இதில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

பெனால்டியை தவறவிட்ட இங்கிலாந்து கேப்டன்  

இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹரி கேன் 54வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து மிரட்டினார்.

ஆனால் 84வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பை ஹரி கேன் தவறவிட்டார்.

கத்தார் உலகக்கோப்பையில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட இங்கிலாந்து கேப்டன்! இந்திய தொழிலதிபர் கூறிய கருத்து | Anand Mahindra Say Harry Kane Missed Penalty Qatar

இது இங்கிலாந்தின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. ரசிகர்களும் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில் ஹரி கேன் பெனால்டி குறித்து கூறியுள்ளார்.

ஹரி கேன்/Harry Kane

@Getty

ஆனந்த் மஹிந்திரா ட்வீட் 

அவரது ட்வீட்டில், ‘நீங்கள் பயிற்சியாளராக இருந்தால், பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட ஹரி கேனுக்கு ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் இந்த நேரத்தில் என்ன சொல்வீர்கள் என்று கேட்டால், என் கருத்துப்படி சிறந்த பயிற்சியாளர் மஹிந்திரா டை-காஸ்ட் மினியேச்சர் வாகனத்தைப் பெறுவார். டிசம்பர் 14 புதன்கிழமை காலை 9 மணி வரை உள்ளீடுகள் ஏற்றுக் கொள்ளப்படும்’ என தெரிவித்துள்ளார்.    

ஆனந்த் மஹிந்திரா/Anand Mahindra

@PTI



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.