கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த முனியம்மாள்(53), நேற்று மதியம் வீட்டுக்கு வெளியே பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி பலியானார். இதேபோல சின்னசேலம் அருகே பெத்தானூர் கிராமம் பெரியசிறுவத்தூர் மெயின்ரோட்டில் வசிக்கும் பெரியம்மாள்(37), உமா (35) உள்பட 11 பேர் கருங்குழி கிராமத்தில் நெல் நடவு பணிக்கு நேற்று சென்றனர். அப்போது நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெரியம்மாள் மற்றும் உமா ஆகிய இருவரும் மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தனர்.