குடித்துவிட்டு தினமும் அடித்து துன்புறுத்திய தந்தையை 15 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய மகன்: டெல்லியை தொடர்ந்து கர்நாடகாவில் பயங்கரம்

பெங்களூரு: தந்தையை 15 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம், முத்தோள் தாலுகாவை சேர்ந்தவர் பரசுராம் குளலி(54). இவரின் மனைவி சரஸ்வதி. தம்பதிக்கு 3 பெண் 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் 4 பேருக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆகாத கடைசி 20 வயது மகன் விட்டல் குளலி உடன் தனது கிராமத்தில் வசித்து வருகிறார். பரசுராம் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு இரவில் தினமும் வீட்டில் மனைவி மற்றும் மகனை கடுமையாக தாக்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 6 ம் தேதி நள்ளிரவில் பரசுராம் குடித்துவிட்டு வந்து மகன் விட்டலை கடுமையாக தாக்கியுள்ளார்.  ஆத்திரமடைந்த மகன் இரும்பு ராடை எடுத்து கோபத்தில் தனது தந்தையின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் சுருண்டு விழுந்த பரசுராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தையின் உடலை கோடாரியை கொண்டு 15 துண்டுகளாக வெட்டி, நீர் வற்றி மூடி வைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் வீசி மண்ணை போட்டு மூடியுள்ளார்.
கணவன் மாயமானது குறித்து பரசுராமின் மனைவி சரஸ்வதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மகன் விட்டலிடம் விசாரித்தபோது தந்தையை கொன்று 15 துண்டுகளாக கூறுபோட்டு ஆழ்துளை கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டான். அவனை னைது செய்த போலீஸ், ஆழ்துளை கிணற்றை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு தோண்டி தற்பொழுது பரசுராம் உடலின் சில பாகங்களை மட்டும் மீட்டுள்ளனர். டெல்லியில் காதலியை பல துண்டுகளாக வெட்டி வீசிய காதலனை போல் கர்நாடக மாநிலத்தில் மகன் தந்தையை கொலை செய்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.