சட்டவிரோத வெளிநாட்டு வேலைக்கான  கடத்தல் தொடர்பில் தகவல்கள்

ஜோர்தானைப் பரிமாற்ற தளமாக பயன்படுத்தி, இலங்கையர்களை பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காக சட்டவிரோதமான முறையில் அழைத்துச் செல்லும் கடத்தல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த கடத்தல் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகின்றோம். இவ்வாறான முறையில் வெளிநாட்டு தொழில்களுக்கு செல்ல வேண்டாம். இதுபோன்ற கடத்தல்காரர்களிடம் அவதானமாக இருக்குமாறும் மக்களை கேட்டுக் கொள்வதாக பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதாக இருந்தால், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்குச் செல்லுமாறு மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

அவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கடத்தல்காரர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 24 மணி நேர தகவல் மத்திய நிலையத்திற்கு 1989 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது 011 286 4241 என்ற இலக்கத்தின் ஊடாக புலனாய்வுப் பிரிவை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறும் மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக பணியகம்; மேலும் தெரிவித்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.