சென்னை: சென்னை முத்திபால்பேட்டையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் சோதனை நடத்தி ரூ.30 லட்சம் திருடிச் சென்றவர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது. சென்னை பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்திவரும் அப்துல்லா என்பவரின் வீட்டுக்கு இன்று காலை ஒரு கும்பல் வந்தது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என கூறி வீட்டில் இருந்த ரூ.10 லட்சத்தை எடுத்து சென்றுள்ளனர்.
