தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதன்படி, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.