தமிழகத்தில் இன்று (13.12.2022) எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.. முழு விபரம்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (டிசம்பர் 13ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

கடலாடி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

நாகப்பட்டினம்

திருக்குவளை, கீழ்வேளூா் துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று  காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

திருப்பூர்

பல்லடம் மின் கோட்டம் காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

திருச்சி

கொப்பம்பட்டி, டி.ரெங்கநாதபுரம் துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.