கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றுவரும் நிலையில், தாய்லாந்தில் யானைகள், பள்ளி மாணவர்களுடன்
கால்பந்து விளையாடி, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தின.
உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அர்ஜெண்டினா, பிரான்ஸ், மொராக்கோ, குரேஷியா நாடுகளின் கொடிகள் உட்பட, ஃபிபா உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்ற நாடுகளின் கொடிகளை, உடலில் வர்ணம் தீட்டிய 13 யானைகள், மைதானத்தில் கால்பந்து விளையாடியதை மாணவர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்தவும், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அயுத்தயா யானை காப்பகத்தின் மேலாளர் கூறினார்.