திருக்கடையூரில் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் தரிசனம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதின பரிபாலனத்திலுள்ள , தேவாரப்  பாடல்பெற்ற  ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இது அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 

இக் கோயிலில் 60, 70, 80, 90, 100 வயதை எட்டியவர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடக்கும் என்பது ஐதிகம். 

திருக்கடையூரில் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் தரிசனம்

எனவே இங்கு அஷ்டமி, நவமி, கரிநாள் என் வேறுபாடில்லாமல்  ஆண்டு முழுவதும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஆயுஸ்யோமும் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி போன்ற திருமணங்களும் நடைபெறும்.

இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு நேற்று (டிச. 12) குடும்பத்துடன் வந்த நடிகர் சிவகார்த்திகேயன் கோ பூஜை, கஜ பூஜை செய்தும், கள்ள விநாயகர், சுவாமி, அம்பாள், கால சம்ஹார மூர்த்தி சந்நிதிகளுக்குச்  சென்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தார்.

திருக்கடையூரில் சிவகார்த்திகேயன்

இப்பூஜைகளை கணேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.