திருமணமான ஹன்சிகா வீட்டில் வந்திறங்கிய பேரிடி: டைவர்ஸூக்கு விண்ணப்பம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய்பூரில் நடிகை ஹன்சிகாவுக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழா சினிமா வட்டாரத்தில் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. ஹன்சிகாவின் திருமண விழாவில் தெனிந்தியா மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு, நட்சத்திர தம்பதியை வாழ்த்தினர். இந்நிலையில், அவர்களது வீட்டில் திருமணம் முடிந்த பத்தே நாட்களில் டைவர்ஸ் விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

ஹன்சிகா சகோதரர் விவாகரத்து

ஹன்சிகாவின் சகோதரரான பிரசாந்த் மோத்வானி, தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் விவகாரத்து முடிவுக்கு சென்றுள்ளார். பிரசாந்த் மோத்வானிக்கும், அவரது மனைவி முஸ்கான் நான்சிக்கும் இடையே அண்மைக்காலமாக சுமூகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது விவாகரத்து முடிவை எட்டியுள்ளதாக தெரிகிறது. ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் இருந்து தன்னுடைய திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளார். 

பிரசாந்த் மோத்வானி திருமணம்

பிரசாந்த் மோத்வானி முஸ்கான் நான்சியை 2021 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் இவர்களின் திருமணம் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. இதற்கான காரணம் அண்மையில் தெரியவந்தது. அதாவது, பிராசந்த் மோத்வானியின் மனைவி முஸ்கானுக்கு பெல்ஸ் பால்ஸி நோய் (முக முடக்கம்) இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவருடைய முக அம்சங்கள் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இணையத்தில் பதிவிட்ட அவர், கடினமான காலத்தில் தனது பெற்றோர் தனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், அந்த பதிவில் அவருடைய கணவர் பிரசாந்த் மோத்வானி குறித்து எதுவும் பேசவில்லை. மேலும், அந்த பதிவில் முக முடக்கத்தால் தனக்கு ஏற்பட்ட வலிகளையும் உருக்கமாக கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.