விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் சண்டைக்கும் பஞ்சமில்லை, ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லை. ஆனால் சில ரோமியோக்கள் இந்த சீசனை விட்டு வெளியேறியதிலிருந்து பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லை என்றாலும் அதிரடி காட்சிகள் மட்டும் இருந்து வருகிறது. இருப்பினும் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்ததாக இருப்பதாகவே சிலர் கருதுகின்றனர்.
மொத்தம் 21 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த போட்டியிலிருந்து இதுவரை மொத்தம் 10 பேர் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையில் கடந்த வாரம் எலிமிநேஷனில் சனிக்கிழமை அன்று ராம் வெளியினார், அவரை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையன்று ஆயிஷா வெளியேறினார்.
இதற்கிடையில் தற்போது வரை பிக்பாஸ் சீசன் 60 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வைல்ட் கார்டு எண்ட்ரியாக பரபரப்பான போட்டியாளரை களத்தில் இறக்க பிக் பாஸ் யோசித்துக்கொண்டு வருகின்றது. இதனிடையே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆயிஷாவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அந்தவகையில் ஆயிஷாவுக்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்படி மொத்தம் 12.50 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. அத்துடன் இவர் எல்.இ.டி டிவி உட்பட ஏராளமான பரிசுப் பொருட்களையும் தட்டிச் சென்றுள்ளார். அதேநேரத்தில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஆயிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.