பிரான்சின் பல பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சிமையம் விடுத்துள்ள எச்சரிக்கை


பிரான்சின் 12 பகுதிகளுக்கு பனிப்பொழிவு மற்றும் பனி தொடர்பில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எந்த பகுதிக்கு அதிக பாதிப்பு?

குறிப்பாக வடமேற்கு மற்றும் முழு கிழக்கு பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில், திங்கட்கிழமை இரவே கிழக்கு பிரான்சின் பல பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கிவிட்டது. Savoie, Haute-Savoie, Ain, Rhône மற்றும் Loire பகுதிகள் பனிப்பொழிவை சந்தித்துவருகின்றன.

அதுபோக, Côtes-d’Armor, Morbihan, Ille-et-Vilaine, Mayenne, Orne, Manche மற்றும் Sarthe ஆகிய பகுதிகளில் உறையவைக்கும் மழை, 6.00 மணி வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்சின் பல பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சிமையம் விடுத்துள்ள எச்சரிக்கை | Warning Issued By Meteorological Center

Photo by OLIVIER CHASSIGNOLE / AFP

ஆரஞ்சு எச்சரிக்கை நீட்டிக்கப்படலாம்

ஆரஞ்சு எச்சரிக்கை, பாரீஸ் பகுதிக்கும் நீட்டிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி, Lyonஇல் சுமார் 2 சென்றிமீற்றர் அளவுக்கு பனி பெய்துள்ளது. Grenobleஇல் 4 சென்றிமீற்றர் அளவுக்கும் Barnasஇல் 6 சென்றிமீற்றர் அளவுக்கும் பனி பெய்துள்ளது.

பனிப்பொழிவு, Brittany, Normandy முதல் Grand-Est வரை, புதன் மற்றும் வியாழக்கிழமை வரை தொடரலாம் என்றும், பாரீஸ் பகுதியிலும் பனிப்பொழிவு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.