மனைவிக்கு 2-ஆவது திருமணம் செய்ய முயன்ற மாமனார் – அடித்துக் கொன்ற கணவன்!

மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற மாமனாரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை எஃப்.எஃப் ரோடு தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகள் நாகரத்தினம். இவர், பிரபாகரன் என்பவரை ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரனை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஆத்விக் என்ற இரண்டரை வயது ஆண் குழந்தையும் உள்ளது.
image
இந்நிலையில் நாகரத்தினம் மற்றும் பிரபாகரனுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில், பிரிந்து வாழ்ந்து வந்தனர், இதையடுத்து நாகரத்தினத்திற்கும் பிரபாகரனுக்கு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நாகரத்தினத்திற்கும் தமிழ் என்பவருக்கும் இரண்டாவது திருமணம் செய்ய பாலசுப்பிரமணியன் முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து நேற்று காலை, விவாகரத்து வழக்கிற்காக மதுரை நீதிமன்றத்திற்கு வந்த பாலசுப்பிரமணியன் அவரது மகள் நாகரத்தினம் குழந்தை ஆத்விக் ஆகியோருடன் மறுமணம் செய்ய இருந்த தமிழ் என்பவரும் வந்துள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த மருமகன் பிரபாகரன், அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு நேற்று இரவு சாலையில் சென்று கொண்டிருந்த தனது மாமனார் பாலசுப்பிரமணியத்தை மூவரும் இரும்பு ராடால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
image
இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு வாசல் காவல் துறையினர் பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பாலசுப்பிரமணியனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மருமகன் பிரபாகரன் அவரது நண்பர்களான பாலகிருஷ்ணன் மற்றும் மகாலிங்கம் ஆகியாரை தேடி வருகின்றனர்.
மருமகன் மாமனாரை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.