மீனாட்சி பொண்ணுங்க தொடரிலிருந்து விலகிய மோக்சிதா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'மீனாட்சி பொண்ணுங்க' தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த மோக்சிதா, திடீரென விலகிவிட உடனடியாக சவுந்தர்யா ரெட்டி என்கிற மற்றொரு நடிகை அந்த கதாபாத்திரத்தில் இணைந்தார். சில நாட்களே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த அந்த கன்னடத்து பைங்கிளி எதற்காக சீரியலை விட்டு விலகினார் என பலரது மனதிலும் கேள்வி எழுந்தது. இந்நிலையில், அவர் விலகியதற்காக காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அண்மையில் அவர் அளித்த பேட்டியிலிருந்து தெரியவரும் தகவலின் படி, மோக்சிதா ஏற்கனவே கன்னட மொழியில் செம்பருத்தி சீரியல் ரீமேக்கில் நடித்து வருகிறார். அந்த தொடர் அங்கே சூப்பர் ஹிட்டாகி வருகிறது. எனவே, மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடிக்க அணுகும் போது கூட 15 நாட்கள் மட்டுமே கால் ஷீட் தருவதாக சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த கால்ஷீட்டிற்குள் படப்பிடிப்பை நடத்தவில்லையாம். அதுமட்டுமில்லாமல் கன்னட சீரியலின் ஷூட்டிங்கிற்கு கிளம்பி செல்லும் நாட்களில் மீண்டும் நடிக்க அழைத்துள்ளனர். ஒரிரு முறை என்றால் கூட பராவாயில்லை தொடர்ந்து இதையே செய்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கடுப்பில் தான் ஒரேடியாக கன்னட சீரியலுக்கே நடிக்க சென்றுவிட்டாராம் மோக்சிதா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.