தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகையே ஆட்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 12 ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பிறந்தநாளையொட்டி அவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் தங்களின் வாழ்த்து மழைகளை பொழிந்திருக்கும் நிலையில், நடிகை ஸ்ரீதேவி அவருக்காக 7 நாட்கள் சாப்பிடாமல் இருந்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், நடிகை ஸ்ரீதேவியும் சுமார் 25 படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர்.
ரஜினிகாந்த் – ஸ்ரீதேவி ஜோடி
தமிழ், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி படங்களும் இதில் அடங்கும். 72 வயதான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த அனைத்து படங்களுமே கிட்டதட்ட மெஹா ஹிட் வெற்றியை பெற்றன. இருவரும் திரையில் சூப்பர் ஜோடி என கொண்டாடப்பட்டனர். அப்போது, இவர்களைப் பற்றிய கிசுகிசுக்களும் அதிகம் பரவிக் கொண்டே இருந்தது. திரையில் சூப்பரான ஜோடியாக இருந்த நிலையில், வாழ்க்கையில் இருவரும் மாறா அன்புடன் தங்களது பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கினர்.
ஸ்ரீதேவி 7 நாட்கள் உண்ணாவிரதம்
ரஜினிகாந்துக்கு 2011 ஆம் ஆண்டு உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. ராணா படப்பிடிப்பில் இருக்கும்போது அவருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பால், உடனடியாக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்காக உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் ஸ்ரீதேவியும் ஒருவர். மும்பையில் இருந்த ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தாராம். உடனடியாக புனேவில் இருந்த ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று ரஜினிக்காக பிரார்த்தனை செய்தாராம்.
ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டி 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீதேவி, இதனைப் பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை. ரஜினிகாந்த் குணமடைந்த பிறகு தனக்கு நெருக்கமானவர்களிடம் இந்த தகவலை ஸ்ரீதேவி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஸ்ரீதேவி – போனிக்கபூர்
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியாகி இருந்த நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் சென்றார். அங்கு அவருக்கு பிரபல சினிமா தயாரிப்பாளர் போனிக்கபூருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது அவர் இந்த பூவுலகில் இல்லையென்றாலும், ரஜினிகாந்துடன் ஸ்ரீதேவி நடித்த படங்கள் அனைத்தும் கிளாசிக் ஹிட்டாக எப்போதும் இருக்கும்.