சென்னை ராஜரத்தினம் அரங்கத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி உண்ணாவிரத போராட்டம் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சார்பில் நடந்தது. அப்பொழுது பேசிய சரத்குமார், “தான் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த போது அதற்கு தடை சட்டம் இல்லை. அதன் பின் தான் அவசர சட்டம் பிறப்பித்தனர்.
அதற்கு முன்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருந்தால் நான் நிச்சயம் நடித்திருக்க மாட்டேன். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டத்தை உருவாக்குவது அரசுடைய வேலை. அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி இடம் நான் வலியுறுத்தி இருக்கின்றேன். ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல ஆன்லைனில் பல விஷயம் இருக்கிறது.
இது போன்ற விளம்பரங்களில் நான் மட்டுமே நடிப்பது போல விமர்சிக்கிறார்கள். ஷாருக்கான், தோனி உள்ளிட்டோர் கூட தான் நடிக்கின்றனர். குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்களை கூட விளம்பரத்திற்காக ஆன்லைன் ரம்மி தற்கொலை என்று கூறி விடுகின்றனர்.
உண்மையில் ரம்மி அறிவுபூர்வமான ஒரு விளையாட்டு அதில் ஜெயிக்க திறமை வேண்டும்.” என்று பேசியுள்ளார் இவ்வாறு ஆன்லைன் ரம்மி விளையாடுவது ஒரு திறமை என்று அவர் தெரிவித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.