ஜெய்ப்பூர்: காங்., எம்.பி ராகுலின் பாரத் ஜோடோ நடைப்பயணம் வரும் 16ம் தேதி 100வது நாள் ஆகும். அந்த நாளில் ஹிமாச்சல பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
காங்., எம்.பி. ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3570 கிலோ மீட்டர் தூரத்துக்கான 150 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரையை துவக்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ரா, மத்திய பிரதேசத்தில் நடைபயணத்தை முடித்த பிறகு, கடந்த 3ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திற்கு நுழைந்தார்.
ராகுல் நேற்று பூந்தி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதோதரா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் ராகுலுடன் நடைபயணம் மேற்கொண்டனர். வரும் 23ம் தேதி வரை அவர் ராஜஸ்தானில் பாதயாத்திரை மேற்கொள்வார்.

இந்நிலையில், இன்று(டிச.,13) ராஜஸ்தானின் ஜீனபூரில் ராகுல் யாத்திரையை மேற்கொண்டார். இந்த பாதயாத்திரையின் 100-வது நாளை கூடுதல் சிறப்புடன் கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, 100-வது நாளான வரும் 16-ம் தேதி ஜெய்ப்பூரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என காங்., பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், வரும் 16ம் தேதி 100வது நாள் ஆகும். அந்த நாளில் ஹிமாச்சல பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ராகுலின் யாத்திரை வரும் 21-ம் தேதி அரியானாவிற்கு செல்ல இருக்கிறது. இந்த யாத்திரை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரில் நிறைவடையும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement