2023ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டப்படி நடத்தப்படும்: தமிழ்நாடு அரசு

வரும் பொங்கல் பண்டிகைக்கு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் திட்டமிட்டபடி கட்டாயமாக நடத்தப்படும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கால்நடை பராமரிப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பாரம்பரியமாக விளையாடப்பட்டு வரும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் பீட்டா சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2017ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, போட்டியை நடத்த தமிழக அரசின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.