தமிழ் சினிமாவில் தளபதியாக ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர் நடிகர் விஜய். தற்போது வம்சியின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகின்றது.
இதையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் எளிமையாக நடந்து முடிந்த நிலையில் ஜனவரி மாதம் இப்படத்தின் படபிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Rajini: ஜெயிலர் படத்தில் இவ்வளோ விஷயம் இருக்கா ? ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!
இந்நிலையில் இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தளபதி சந்தித்தது தான் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. அவ்வப்போது விஜய் தன் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த நிகழ்வு கொரோனா காரணமாக நடக்காமல் இருந்தது.
லவ் டுடே வெற்றி – ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழுவினர்
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதையடுத்து கடந்த மாதம் தான் விஜய் மூன்று மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை தன் பனையூர் அலுவலகத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது இரண்டாம் கட்டமாக மேலும் சில மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இன்று மதியம் பனையூர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் சமூகத்தளங்களில் செம வைரலாக இந்த செய்தி போய்க்கொண்டிருக்க மறுபக்கம் சிலர் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். என்னவென்றால் விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு மோதவுள்ளது.
எனவே பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே தினத்தில் வெளியாவதால் இருவரின் ரசிகர்களும் தற்போதே இணையத்தில் மோதலை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் வாரிசு படத்திற்காக விஜய் ரசிகர்களை சந்தித்து அப்படத்தை விளம்பரம் செய்து வருகின்றார் என சில ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஒருசிலரே இது வழக்கமான சந்திப்பு தான் என்கின்றனர். இதன் காரணமாக தற்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் மோதல் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.