அமராவதி: ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணையில் இருந்து இரவு 9 மணிக்கு 300 கனஅடி நீரை திறக்கப்பட உள்ளது. ஆந்திராவில் திறக்கப்பட்ட தண்ணீர் பள்ளிப்பட்டு, நெடியம், சாமந்தவாடா வழியே பூண்டி ஏரியை வந்தடையும். கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலங்களை மக்கள் எச்சரிக்கையுடன் கடக்க ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.
