இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையைஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுரை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள், கப்பற்றுரை மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புனித தம்பதிவ யாத்திரைக்கு செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த பயணிகள் படகு சேவை பெரும் நிவாரணமாக அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.
இங்கு கட்டணம் குறித்து படகு உரிமையாளர்கள் தெரிவிக்கையில்..
ஒரு வழிப் பயணத்திற்கு மாத்திரம் பயணியிடம் இருந்து கட்டணமாக 60 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும். மற்றும் அவர்கள் 100 கிலோ கிராம் எடையுடைய பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளனர்.