இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப்பிசில் பரீட்சைக்குரிய மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடாத்துவதை இன்று நள்ளிரவு முதல் தடை செய்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏதிர்வரும் 18 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சையை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், இப்பரீட்சை முடிவடையும் வரை, பரீட்சார்த்திகளுக்கு மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் என்பவற்றை நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளன..
அத்துடன், இந்தப் பரீட்சை வினாப்பத்திரங்கள் தொடர்புடைய வினாக்கள் வழங்கப்படுவதான சுவரொட்டிக்ள, பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள், இணையத்தளம் அல்லது சமூக ஊடகங்களூடாக விளம்பரப்படுத்தல் அல்லது அவற்றை கைவசம் வைத்திருத்தல் என்பன முழுமையாக தடைசெய்யப்பட்டுளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.