ஊழல் அமைச்சரவையில் இடம்பெற்ற உதயநிதிக்கு வாழ்த்துகள்… பாஜக சர்ச்சை போஸ்டர்!

உதயநிதியை கிண்டல் செய்யும் வகையில் மதுரை மாநகர் முழுவதிலும் பாஜக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சங்கரபாண்டி என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்களில், “தமிழகத்தின் அமைச்சராக பதவியேற்கும் உபிஸ்களின் சின்னவர் உதயநிதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் எனவும், மக்களின் வரிப்பணம் ஒரு கோடியே பதினான்கு இலட்சம் செலவு செய்து மெரினா கடற்கரையில் இவர் திறந்து வைத்த மாற்றுத்திறனாளிகளின் மரப்பாதை வெறும் 13 நாட்களின் புயல் வருவதற்கு முன் வீசிய காற்றில் மரப்பாதை இடிந்து போன சாதனையை செய்து திமுக ஊழல் அமைச்சரவையில் இடம்பெறும் ப்ளே பாய்க்கு வாழ்த்துக்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மெரினா மரப்பாதை மூலம் வைகை தெர்மாகோல் சாதனையை முறியடித்த சின்னவருக்கு வாழ்த்துக்கள்” எனவும், உதயநிதியை கலாய்க்கும் வகையிலான வார்த்தைகள் அடங்கிய போஸ்டர்கள் மதுரை மாநகரின் ப்ல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதது. பாஜகவின் இந்த போஸ்டர்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கோவையில் செய்தியாளர்களிடம் கூறூம்போது, “ஒன்றை ஆண்டுகளில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியது தான் திமுக ஆட்சியின் சாதனை. ஸ்டாலின் எதை செய்ய மாட்டேன் என்றாரோ, அதைத்தான் செய்வார். கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிசாமி மதுக்கடைகளை மூடினார். கொரோனா காலத்தில் ஸ்டாலின் மதுக்கடைகளை திறந்தார். எனது மகன், மருமகன் அரசியலுக்கு வரமாட்டார்கள் என ஸ்டாலின் சொன்னார். படிப்படியாக கொண்டு வந்து உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் மிட்டா மிராசுகள் இருந்ததால், அண்ணா திமுகவை ஆரம்பித்தார். ஆனால், காங்கிரசை விட திமுக மோசமாக உள்ளது. திமுகவை குடும்ப சொத்தாக மாற்றிவிட்டார்கள். கருணாநிதி கூட ஸ்டாலினுக்கு இறுதிவரை பதவி கொடுக்காமல் வைத்திருந்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு வேகமாக பதவி கொடுக்கிறார்கள். ஸ்டாலினுக்காக வைகோவை கட்சியில் இருந்து நீக்கினார்கள். ஆனால் வைகோ தற்போது எதுவும் பேசவில்லை. திமுக கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சனைகள் எதற்கும் குரல் கொடுப்பதில்லை. திமுக எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை” என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.