எம்ஜிஆர் நினைவு தினம்: ஆதரவாளர்களை அலர்ட் செய்த ஓபிஎஸ்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் சமீபத்தில் அணுசரிக்கப்பட்டது. அதிமுக உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில்

, இபிஎஸ் தனித்தனியாக அஞ்சலி செலுத்தினர். சசிகலா, டிடிவி தினகரனும் தனித்தனியாக அஞ்சலி செலுத்தினர்.

டிசம்பர் 24ஆம் தேதி அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு தினம் அணுசரிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு

அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக காலத்தால் அழியாத திட்டங்களை செயல்படுத்தி, மக்களின் உள்ளங்களில் இன்றளவிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவர் ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆர். அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளான 24-12-2022 (சனிக்கிழமை) 10.30 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடத்தில்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள்.

இதன் தொடர்ச்சியாக, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள். இதனைத் தொடர்ந்து, நினைவிட வளாகத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும்.

மேற்படி நிகழ்ச்சியில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள் மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலக் கழக நிர்வாகிகள் அனைவரும் 24-12-2022 அன்று ஆங்காங்கே மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.