டி.டி.எஃப் வாசன் மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இயக்குவது, போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை ஓட்டுவது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.
அவர் மீது ஏற்கனவே நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடலூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி ஐந்து பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் வருகையை அறிந்து கொண்ட டி.டி.எஃப் வாசனை காண அவர்களது ரசிகர் கூட்டம் கூறியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.