கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் பலி? பிகாரில் பேரதிர்ச்சி சம்பவம்

பிகார் மாநிலம், சரண் மாவட்டத்துக்குட்பட்ட சாப்ரா பகுதியில் மதுபிரியர்கள் கூட்டம் நேற்று இரவு கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளது. இதில் மொத்தம் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . 10 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கள்ளச்சாராயம் குடித்ததால் தான் உயிரிப்புகள் நேர்ந்துள்ளதாக இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் தரப்பில் மரணத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பிறகே மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கள்ளச்சாராய விவகாரம் பிகார் மாநில சட்டமன்றத்தில் இன்று எதிரொலித்தது. இந்த சம்பவத்துக்காக நிதீஷ் குமார் தலைமையிலான அரசுக்கு எதிராக, எதிர்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் கோஷங்கள் எழுப்பினர்.

கள்ளச்சாராயத்தால் ஆயிரக்கணக்கா மக்கள் மாண்டு வருவதாகவும், கிராமங்களுக்கு கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்க வேண்டிய போலீஸ், அதன் கடமையில் இருந்த தவறிவிட்டதாகவும். இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்து் கொண்டிருக்கும் மாநில அரசு இனி ஒருகணம் கூட ஆட்சியில் இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டது என்றும் பாஜக எம்எல்ஏ ஜனக் சிங் சபையில் ஆவேசமாக பேசினார்.

அவருக்கு முதல்வர் நிதீஷ் குமாரும் ஆக்ரோஷமாக பதிலளித்தார். ஆனாலும் அவரது விளக்கத்தை ஏற்காத பாஜக எம்எல்ஏக்கள் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பிகார் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதும், அதனை குடிக்கும் மதுபிரியர்கள் இறப்பதும் தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.