நாடு முழுவதும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை முன்வருகிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து இது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Ø தீவு முழுவதும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சியை நகர அபிவிருத்தி அதிகாரசபை செய்ய முன்வருகிறது…
Ø எல்ல சுற்றுலாத் திட்டம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது…
Ø அறுகம்பே, கல்பிட்டி, ஹிக்கடுவ மற்றும் நுவரெலியா சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தில்..
நகர அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து எல்ல, அறுகம்பே, நுவரெலியா, கல்பிட்டி மற்றும் ஹிக்கடுவையுடன் நகர்ப்புறங்களுக்கான சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் எல்ல சுற்றுலாத் திட்டம் ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அறுகம்பே, கல்பிட்டி, ஹிக்கடுவ மற்றும் நுவரெலியா சுற்றுலா அபிவிருத்தி திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு இறுதிக் கட்டத்திலேயே உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் கடலோர பாதுகாப்பு மற்றும் கடற்கரை வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தினால் இலங்கையைச் சுற்றியுள்ள கடற்கரைகளை உள்ளடக்கிய கங்கை வாடி, சீதகல்ல, நாயாறு கடற்கரை, ஆளுநர் அலுவலகம், வயிக்கால, சாம்பல்தீவு கடற்கரை உள்ளடங்கிய 24 புதிய சுற்றுலாத் தலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களின் வளர்ச்சிக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு சிறப்பு கவனம் செலுத்துகிறது.
சுற்றுலாத்துறை ரீதியான கவர்ச்சியுடைய இடங்களை அபிவிருத்தி செய்யும் போது அந்த இடத்தில் ஏற்கனவே இருக்கின்ற அழகுக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கடலோரப் பாதுகாப்பு திணைக்களமும் வழிகாட்டலை வழங்கியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இந்த சுற்றுலாத் தலங்கள் குறித்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கற்பித்தல் எதிர்காலத்தில், பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் தூதரகங்கள், உள்ளிட்ட சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றும் அமைச்சர் கூறினார். இது சுற்றுலா அமைச்சுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
முனீரா அபூபக்கர்
2022.12.14