தமிழக அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம் – கே.பி. ராமலிங்கம் பகீர் பேட்டி!

வரும் நாடாளுமன்றத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம் என பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் பேட்டியளித்துள்ளார்.

தருமபுரியில் நடைபெற்ற கட்சி நிகழ்சிக்கு பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அமைச்சராக பொறுப்பேற்றது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழ்நாடு எனும் வாழை தோட்டத்திற்குள் குரங்குகள் கூட்டம் அமைச்சரவையில் இருக்கின்றது. அந்த கூட்டத்திற்குள் புதிய குரங்கு நுழைய இருக்கின்றது இது என்னுடைய கருத்து என்றார்.

ஓபிஎஸ் அதிமுகவுக்கு தொல்லை.சத்தீஸ்கர் மேகாலயாயவுக்கு கவர்னராக போகலாம் -ராஜன் செல்லப்பா

மேலும் அவர் கூறும் போது, உதயநிதி அமைச்சராவதை கடைகோடி திமுக தொண்டன் வரை ஏற்றுக்கொண்டார்கள் என்றால், தாங்களும் ஏற்றுக்கொள்ள தயார். மு.க. ஸ்டாலினை இப்படி தான் கருணாநிதி அவர்கள் கொண்டு வந்தார். அவரை இப்போது திமுகவி்னர் ஏற்றுக் கொள்ளவில்லையா?, ஏற்றுக்கொள்வது வேறு, சகித்து கொள்வது வேறு.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

புயலால் பெரிய பாதிப்பு இல்லை. காற்றின் வேகம் சில இடங்களில் சிறு சிறு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. புயல் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை பாராட்டுகின்றேன். புயலே தங்களால் நின்றது என்றாலும், அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அரண்மனைக்கு எதிராக எதிர்மனை போடக்கூடாது.

தருமபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகள், ஒரு நாடாளுமன்ற தொகுதியில் பாஜக எப்படி வெற்றி பெறுவது என திட்டமிடபட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. வருகின்ற ஜனவரி 2ம் தேதி தருமபுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாநிலத்தலைவர் அண்ணாமலை பங்கேற்க இருக்கிறார். அதற்கான கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது” இவ்வாறு கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார்.

சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க, உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சரான உதயநிதிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் முன்னாள் எம்பி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.